கடல் இன்று சினம் கொள்கிறது

 

மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான மற்றும் சிலாபத்திலிருந்து மன்னார் மற்றும் புத்தளம் ஊடாக காங்கேசன்துறை வரையான கடற்பரப்புகளுக்கு பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் நிலைமை தொடர்பில்  எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள இந்த எச்சரிக்கை நாளை (13) நண்பகல் 12.00 மணி வரை அமுலில் இருக்கும்.


அத்துடன் கடற்பரப்புகளில் சில வேளைகளில் மணிக்கு 50 கி.மீ வரை பலத்த காற்று வீசக்கூடும்.

Post a Comment