2026 மே 25 ஆம் திகதி முதல் அமலுக்கு வரும் வகையில்,சுற்றுலா நோக்கங்களுக்காக இலங்கை செல்லும் அனைத்து வெளிநாட்டுப் பிரஜைகளும் பயணத்திற்கு முன்னதாக eta.gov.lk என்ற இணையதளத்தின் ஊடாக மின்னணு பயண அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், சுற்றுலா நோக்கத்திற்காக இலங்கை செல்லும் சிங்கப்பூர் பிரஜைகளுக்கு ETA அமைப்பின் மூலம் 30 நாட்களுக்கான பயண அனுமதி கட்டணமின்றி இலவசமாக வழங்கப்படும் என சிங்கப்பூரிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.
