வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தினை முன்னிட்டு. நீதிக்கான நீள் பயணம்

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தினை முன்னிட்டு, 

எதிர்வருகின்ற 30ஆம் திகதி வடக்கு கிழக்கு இணைந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினால் யாழ்ப்பாணத்திலே "நீதிக்கான நீள் பயணம்" என்று சொல்லப்படுகின்ற பாரிய மாநாடு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த மாநாட்டுடன் இணைந்ததாக பேரணியும் ஒழுங்கமைப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த பேரணியிலே யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமாக நாங்கள் அவர்களுக்கு முழுமையான ஆதரவினை வழங்க இருக்கின்றோம் என 

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

யாழ் ஊடக அமையத்தில் நேற்றைய தினம் மாலை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த போது யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய பிரதிநிதிகள் இதனை தெரிவித்தனர்.

Post a Comment