நீர்கொழும்பில் அமைந்துள்ள பள்ளன்சேனை சிறைச்சாலையில் பதற்றமான சூழ்நிலை நிலவுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விவரங்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை என்று பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்போது சிறைக்கைதிகள் சிலர் சிறைச்சாலையின் மேல் கூரை மீது ஏறியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த மாதம் நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதட்டுத் சூழ்நிலையை அடுத்து, அங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதிகள் சிலர் பல்லன்சேனை திறந்தவெளி சிறைச்சாலை முகாமுக்கு மாற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த அமைதியின்மை குறித்து தகவல் கிடைத்ததை அடுத்து, அப்பகுதிக்கு பல பொலிஸ் குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளன.
