முன்னாள் அமைச்சரின் மனைவி விபத்து ஒன்றில் திடீர் மரணம்




முன்னாள் அமைச்சர் ஜகத் புஷ்பகுமாரவின் மனைவி விபத்தில் உயிரிழந்தார்

முன்னாள் அமைச்சரும் மொணராகலை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜகத் புஷ்பகுமாரவின் மனைவி திடீர் விபத்தொன்றில் உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் இரு பிள்ளைகளின் தாயாரான தேஷானி குணரத்ன (வயது 55) என்பவராவார்.

அவர்களுக்குச் சொந்தமான புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வரும் வீடொன்றி

ன் இரண்டாவது மாடியிலிருந்து கீழே விழுந்ததில் இந்த விபத்து நேரிட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.


கராப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே அவர் இன்று (19) காலை உயிரிழந்துள்ளார்.


அவரது சடலம் தனமல்விலயிலுள்ள அவரது வீட்டிற்கு கொண்டு செல்லப்படவுள்ளது.


Post a Comment