வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவப் பெருந்திருவிழா இன்று வெகு விமரிசையாக ஆரம்பமானது.
இன்று காலை சுமார் 8.15 மணியளவில் வசந்த மண்டப பூஜை இடம்பெற்றதைத் தொடர்ந்து, காலை 10 மணியளவில் கொடியேற்ற நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.
கொடியேற்ற நிகழ்வில் பெருமளவான பக்தர்கள் கலந்து கொண்டு, நல்லூர் கந்தசுவாமி பெருமானை பயபக்தியுடன் வழிபட்டு அருளாசி பெற்றனர்.
இதனையடுத்து, நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத் திருவிழா தொடர்ந்து நடைபெறவுள்ளது.
.jpg)