ஊவாவில் பலாக்காய் விழுந்து அம்பலமான கள்ளக்காதல்

 

ஊவா மாகாண கிராமமொன்றில் எதிர்பாராத விதமாக பலாக்காய் கீழே விழுந்ததால் ஒரு குடும்பத்தின் ரகசியம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

கொழும்பில் கட்டுமான நிறுவனமொன்றில் வேலை செய்யும் 36 வயது நபர் ஒருவர் மாதம் ஒருமுறை வீட்டிற்கு வருவது வழக்கம். அவரது மனைவி மற்றும் இரு பிள்ளைகள் ஊவா கிராமத்தில் வசித்து வருகின்றனர். மனைவியின் நடத்தை குறித்து பல வதந்திகள் இருந்தாலும் ஆதாரம் இல்லாததால் அவர் சந்தேகப்படவில்லை.

இந்நிலையில் நேற்று இரவு 11.30 மணியளவில் எதிர்பாராத விதமாக அவர் வீட்டிற்கு வந்துள்ளார். கையடக்க தொலைபேசி மின்கலன் தீர்ந்து போனதால் வருவதை முன்கூட்டி சொல்ல முடியவில்லை.

கதவை தட்டியபோது மனைவி தாமதமாக கதவை திறந்ததுடன் பின்பக்க கதவு திறக்கும் சத்தமும் கேட்டது. சந்தேகமடைந்த அவர் பின்புறம் சென்று பார்த்தபோது வீட்டின் பின்னால் இருந்த பலா மரத்தில் ஒருவர் ஒளிந்திருப்பதை கண்டார். அப்போது மரத்திலிருந்து சில பலாக்காய்களும் கீழே விழுந்தன.

உடனே அருகில் இருந்த மனைவியின் சகோதர்களை அழைத்து மரத்தில் திருடன் இருப்பதாக கூறினார். வந்தவர்கள் அந்த நபரை இறக்கி விசாரித்தனர். 

விசாரணையில் அவர் அருகில் உள்ள கிராமத்தை சேர்ந்த 39 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தை எனவும், வீட்டு உரிமையாளரின் மனைவியுடன் நெருக்கமாக இருந்தவர் எனவும் தெரியவந்தது.

இதனை அடுத்து கணவர் தனது இரு பிள்ளைகளையும் தானே பார்துக்கொள்வதாகவும், மனைவி அந்த நபருடன் உடனே வீட்டை விட்டு செல்ல வேண்டும் எனவும் முடிவு செய்தார். மனைவியின் சகோதரர்களும் இந்த முடிவிற்கு ஆதரவு தெரிவித்து பிள்ளைகளை பார்த்துக்கொள்வதாக கூறினர்.

தற்போது அந்த நபர் கொழும்பு வேலையை விட்டு விட்டு தனது இரு பிள்ளைகளையும் தானே வளர்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Post a Comment