முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச தனக்கு எய்ட்ஸ் தொற்று இருப்பதாகக் கூறி நீதிமன்றில் முன்னிலையாக முடியாது எனத் தெரிவித்ததாக வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது என தெரிவிக்கப்படுகின்றது.
தனக்கு எய்ட்ஸ் தொற்று இருப்பதாக நீதிமன்றில் முன்னிலையாக முடியாது என தெரிவித்திருப்பதாக செய்திகள் வெளியாகியிருந்தன.
எனினும் அந்த செய்தி சிலரால் எழுதப்பட்டுள்ள போலிச் செய்தி என தெரிவிக்கப்படுகின்றது.
இது முற்றிலும் தவறான மற்றும் அடிப்படையற்ற ஒரு தகவலாகும்.
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச மீது மாத்தறை மற்றும் கோட்டை நீதிமன்றங்களில் சில நிதி முறைகேடு வழக்கள் விசாரணையில் உள்ளன.
அவர் நீதிமன்றத்தில் தொடர்ச்சியாக ஆஜராகாததைத் தொடர்ந்து, அவருக்கு எதிராக நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.
அவரது தரப்பு வழக்கறிஞர்கள் அவர் வெளிநாட்டில் மருத்துவச் சிகிச்சை பெற்று வருவதாகவும், வேறு சில உடல் உபாதைகள் ளுஉயைவiஉய போன்ற முதுகுவலி சார்ந்த பிரச்சினைகள் காரணமாக விமானத்தில் பயணிக்க முடியாது எனவும் மருத்துவ அறிக்கைகளை மட்டுமே சமர்ப்பித்துள்ளனர்.
எய்ட்ஸ் தொற்று இருப்பதாக அவர் கூறியதாக சமூக வலைத்தளங்களிலோ அல்லது பிரதான செய்தி ஊடகங்களிலோ எந்தச் செய்தியும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
