யாழில் நீண்ட காலமாக இயங்கி வந்த கசிப்பு கோட்டை முற்றுகை

 

அரச புலனாய்வுதுறையின் தகவலிற்கமைய துன்னாலை காட்டு பிரதேசத்தில் நீண்ட காலமாக இயங்கி வந்த சட்ட விரோத மதுபானமான கசிப்பு உற்பத்தி நிலையம் நெல்லியடி பொலிஸாரினால் முற்றுகை.

இந்த சுற்றிவளைப்பில்

20,000 ML கசிப்பு

540,000 ML கோடா

கசிப்பு உற்பத்திக்கான உபகரணங்கள் 

மற்றும் மோட்டார் வாகனம் ஒன்றும் கைப்பற்றப்பட்டதுடன் 

கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட துன்னாலை பிரதேசத்தை சேர்ந்த இரு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டனர் அங்கிருந்து தப்பியோடிய மிகுதி சந்தேக நபர்களை கைது செய்யும் நடவடிக்கையை நெல்லியடி பொலிஸார் மேற்கொண்டு வருகிறார்கள்..

அண்மைக்காலங்களாக  வடமராட்சி  பிரதேசத்தில் கசிப்பு விற்பனை  அதிகரித்துள்ளதாக பிரதேசவாசிகள் விசனம் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது..

Post a Comment