காங்கேசன்துறையில் இருந்து மன்னார் ஊடாக கற்பிட்டி வரையும், மாத்தறையில் இருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் அடுத்த சில நாட்களுக்கு கடும் காற்று வீசும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இந்த காலப்பகுதியில் கடலும் கொந்தளிப்பாக காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 50 முதல் 60 கிலோமீட்டர் வரை இருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.
அத்துடன் நீர் கொழும்பில் இருந்து காலி மாத்தறை வழியாக பொத்துவில் வரையான கரையோரத்துக்கு அப்பால் உள்ள கடற்பகுதிகளில் கடல் அலைகள் 2 முதல் 3 மீட்டர் உயரம் வரை எழலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதனால் அந்த பிரதேசங்களில் கரையோர பகுதிகளுக்குள் கடல் நீர் புகுவதற்கான வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக கரையோரத்தில் வசிக்கும் மக்களும் மீனவர்களும் வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள முன்னெச்சரிக்கையுடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
