நாளை மறுதினம் அவர் இலங்கையில் இருப்பார் - எத்தனை பேருக்கு என்ன நடக்குமோ தெரியவில்லை

 


டுபாயில் கைது செய்யப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுவின் உறுப்பினரான லலித் கன்னங்கர என அழைக்கப்படும் 'பஸ் லலித்' (Bus Lalith) என்பவர் அடுத்த வாரம் இலங்கைக்கு அழைத்து வரப்படவுள்ளார்.


இதற்கமைய, எதிர்வரும் திங்கட்கிழமை (24) இரவு அவர் இலங்கைக்கு அழைத்து வரப்படக்கூடும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பஸ் லலித் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் துபாயில் வைத்து கைது செய்யப்பட்டார்.

பஸ் லலித் மீதான குற்றச்சாட்டுகள்:
• 2022: ரவிந்து சன்க த சில்வா அல்லது "பூரு மூனா" என்பவரைக் கொண்டு ஹன்வெல்ல பகுதியில் முஸ்லிம் தொழிலதிபர் ஒருவரைப் படுகொலை செய்தமை.
• 2023: செப்டம்பர் 30 அன்று ஹன்வெல்ல நெளுவத்துடுவ பகுதியில் மற்றொரு தொழிலதிபரைப் படுகொலை செய்தமை.
• 2023: 'மன்ன ரோஷன்' மற்றும் அவரது நண்பர் ஒருவரைப் படுகொலை செய்தமை.
• 2024: ஹன்வெல்ல பகுதியில் வஜிர நிஷாந்த என்பவரையும், முன்னர் படுகொலை செய்யப்பட்ட மன்ன ரோஷனின் சகோதரரையும் படுகொலை செய்தமை.
• 2025 ஆகஸ்ட் 12: ஹோமாகம பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் சாந்த முதுன்கொடுவ (பனா மந்திரி) என்பவரைச் சுட்டுப் படுகொலை செய்தமை.
• 2025 ஜூலை 06: கொழும்பில் உள்ள இரவு விடுதி ஒன்றில் வைத்து 'கொட்டஹெர பொட்டா' மற்றும் 'தெமட்டகொட ருவன்' ஆகியோரைக் கொலை செய்ய முயற்சித்தது.

Post a Comment