அஸ்வெசும கொடுப்பனவைப் பெறுவதற்காக புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ள பயனாளிகளுக்கான கொடுப்பனவுகள் எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதல் வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான அறிவிப்பை சமூகநலன்புரி சேவைகள் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
அஸ்வெசும கொடுப்பனவுக்கான மூன்றாம் கட்ட பயனாளிகளைத் தெரிவு செய்வதற்கான நடவடிக்கைகள் கடந்த மாதம் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
இதன்போது அடையாளம் காணப்பட்ட தகுதியான புதிய பயனாளிகளுக்கான கொடுப்பனவுகளே எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதல் வழங்கப்படவுள்ளதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் அஸ்வெசும கொடுப்பனவுக்காக புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ள பயனாளிகள் மத்தியில் இந்த அறிவிப்பு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
