இலங்கையில் அடுத்த 3 முதல் 5 ஆண்டுகளுக்குள் முதன்முறையாக வணிக ரீதியிலான இயற்கை எரிவாயு மற்றும் மசகு எண்ணெய் உற்பத்தியை ஆரம்பிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இலங்கை பெற்றோலிய எண்ணெய் கூட்டுத்தாபனத்தின் மேலாண் இயக்குநர் மயூரி நெத்திகுமாரகே இந்த முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார்.
மன்னார் படுகையில் 34,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்ட 4 பிரதான கடல்சார் எண்ணெய் ஆய்வுப் பகுதிகளை சர்வதேச நிறுவனங்களுக்கு ஏலம் விடுவதற்கான 'Sri Lanka Licensing Round 2026' அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்பட்டுள்ளது.
இம்முறை நடத்தப்படும் ஏலம் வெறும் ஆராய்ச்சியோடு நிற்காமல், நேரடி வணிக உற்பத்தியை இலக்காகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதில் அரசிற்கு எந்தவித நிதியியல் சுமையுமின்றி, சர்வதேச முதலீட்டாளர்களே முழுச் செலவையும் ஏற்கவுள்ளனர்.
லண்டன் மற்றும் மலேசியாவில் நடைபெறவுள்ள சர்வதேச உச்சிமாநாடுகள் மூலம் உலகளாவிய பெரு நிறுவனங்களை ஈர்க்க இலங்கை அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
