கொழும்பு மேகசின் சிறைச்சாலையில் நேற்று (06.08.2026) இடம்பெற்ற அமைதியற்ற சூழ்நிலை மற்றும் மோதல் சம்பவத்தின் போது, 'கொஸ் மல்லி' என்பவரின் ஆதரவாளர் எனக் கூறப்படும் கைதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சந்தேகநபரின் விவரங்கள் அடங்கிய ஊடக செய்தி வருமாறு:
சம்பவத்தின் போது காயமடைந்த 1777ஆம் இலக்கமுடைய முகமட் அஸ்மான் ஷெரப்டீன் என்ற கைதி, சிகிச்சைக்காக வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
எனினும், சிகிச்சை பலனின்றி இன்று (07.08.2026) அவர் உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இச்சம்பவம் தொடர்பான மரண பரிசோதனை நடவடிக்கைகளை பொரளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
