யாழ். அத்தியடியில் சோகம்: கல்சியம் நீக்கியை அருந்திய 51 வயது நபர் உயிரிழப்பு

 

யாழ்ப்பாணம் அத்தியடி பகுதியைச் சேர்ந்த 51 வயது குடும்பஸ்தர் ஒருவர் கல்சியம் நீக்கியை அருந்தி உயிரிழந்துள்ளார்.

சம்பவம் நேற்று 06.08.2026 இடம்பெற்றுள்ளது.

வீட்டில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக நேற்றுமுன்தினம் இரவு கல்சியம் நீக்கியை அருந்திய நிலையில், யாழ்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். 

இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் திடீர் மரண விசாரணை அதிகாரி வி. அன்ரலா மற்றும் யாழ்ப்பாணம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



Post a Comment