பொத்துஹெர பகுதியில் புகையிரம் ஒன்று தடம் புரண்டுள்ளதால் வடக்கிற்கான புகையிரத சேவை முழுமையாக பாதிப்படைத்துள்ளது.
புகையிரத திணைக்களம் தமிழ் பிளஸ் செய்தி பிரிவிற்கு இதனை தெரிவித்துள்ளது.
பொல்கஹாவெலையிலிருந்து மஹாவ நோக்கி விரைந்த பயணிகள் ரயில், பொத்துஹேர புகையிரத நிலையத்தில் திடீரென தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.
பொத்துஹேர புகையிரத நிலையத்தைக் கடந்து செல்ல வேண்டிய அனைத்து வடக்கு வழித்தட புகையிரதங்களும் தடைப்பட்டுள்ளதாக அந்த திணைக்களம் அறிவித்துள்ளது.
புகையிரத சேவையை வழமைக்கு கொண்டு வருவதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
