இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இலங்கை கிரிக்கெட் உலகின் புதிய நட்சத்திரமாக உருவெடுத்துள்ளார் 25 வயதான சோனல் தினுஷா.
தொடர்ச்சியான சதங்கள் மற்றும் கொழும்பு டெஸ்டில் கேஷர நுவந்துடன் இணைந்து அமைத்த சிறப்பான கூட்டணி மூலம், இலங்கை அணியை தொடர் தோல்வியிலிருந்து மீட்டெடுத்துள்ளார் இந்த இளம் புயல்.
இந்தத் தொடரில் 544 ஓட்டங்களை குவித்து, 77.71 சராசரியுடன் மிகச்சிறந்த துடுப்பாட்ட வீரராக திகழ்கிறார்.
இவரது நிதானமான துடுப்பாட்டத்தை பார்த்த இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் (BCCI) துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா, சோனல் தினுஷாவைப் வெகுவாகப் பாராட்டியுள்ளார்.
இலங்கையின் சோனல் ஒரு அற்புதமான ஆட்டக்காரர். இவரைப் பார்க்க சச்சின் டெண்டுல்கர் போல இருக்கிறது. சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் மாபெரும் சகாப்தமாக உருவெடுக்கும் ஆற்றல் இவருக்கு உள்ளது' என தனது எக்ஸ் தளத்தில் புகழ்ந்து தள்ளியுள்ளார்.
