தங்காலை குடவெல்லவில் துப்பாக்கிச்சூடு

தங்காலை, குடவெல்ல பகுதியில் மீன்பிடிப் படகு உரிமையாளர் ஒருவருக்குச் சொந்தமான வீடு மீது இன்று (12) அதிகாலை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.


பொலிஸாரின் தகவலின்படி, மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் குறித்த வீட்டின் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட பின்னர் அங்கிருந்து தப்பியோடியுள்ளனர்.


இந்தத் துப்பாக்கிச் சூடு 9 மி.மீ. (9mm) ரகத் துப்பாக்கியைப் பயன்படுத்தி நடத்தப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.


இச்சம்பவத்தில் யாருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை எனப் பதிவாகியுள்ளது.

Post a Comment