கொழும்பு 02 கொம்பனி வீதியில் உள்ள கோயிலுக்கு சொந்தமான சுமார் 267 மில்லியன் ரூபா பெறுமதியான நகைகளை திருடியதாக கூறப்படும் சம்பவத்தில் பிரதம குருவுக்கு வெளிநாட்டு பயண தடை விதிக்கப்பட்டுள்ளது.
கோட்டை நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபரான பிரதம குரு இதுவரை கைது செய்யப்படவில்லை. அவர் தலைமறைவாக உள்ளதாகவும் பொலிஸார் கூறுகின்றனர்.
கோயிலுக்கு சொந்தமான நகைகளை அடகு வைத்து அதன் மூலம் கிடைத்த பணத்தில் கொட்டாஞ்சேனை புதிய செட்டியார் வீதியில் காணி ஒன்றை வாங்கியதாக சந்தேகநபர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
காணாமல் போன கோயில் நகைகளை மீட்பதற்கும், அந்த பணத்தில் வாங்கப்பட்டதாக கூறப்படும் சொத்துக்கள் தொடர்பாகவும் பொலிஸார் தற்போது விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
தலைமறைவாக உள்ள சந்தேகநபரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளையும் பொலிஸார் தீவிரப்படுத்தியுள்ளனர்.
