முட்டை பிரியர்களுக்கு அதிர்ச்சி தகவல்

 

உற்பத்தி செலவு அதிகரிப்பால் எதிர்காலத்தில் ஒரு முட்டை விலை 50 ரூபாய் வரை உயரும் என சிறு மற்றும் நடுத்தர அளவிலான கோழிப்பண்ணை உரிமையாளர்கள் கூறுகின்றனர்.

இந்த நாட்களில் கொழும்பு மாவட்டத்தின் சில பகுதிகளில் முட்டை ஒன்றின் சில்லறை விலை 47 முதல் 48 ரூபா வரை அதிகரித்துள்ளது.

சோள இறக்குமதிக்காக வழங்கப்பட்ட அனுமதிப்பத்திரம் இரத்துச்செய்யப்பட்டதன் காரணமாக கால்நடை தீவனத்துக்கான சோளம் வழங்குவதில் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக இலங்கை கால்நடை உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் அஜித் எச். குணசேகர கூறியுள்ளார்.

கால்நடை தீவனத்தின் விலையும் சுமார் 10 சதவீதம் அதிகரித்துள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

இந்நாட்டின் நாளாந்த முட்டையின் தேவை சுமார் 95 இலட்சமாக இருந்த போதிலும், நாளாந்த முட்டை உற்பத்தி 70 இலட்சமாக குறைந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

தற்போது நிலவும் காலநிலைக்கு ஏற்ப முட்டை உற்பத்தி குறையும் என்றும் தலைவர் தெரிவித்துள்ளார்.

Post a Comment