உயிர்த்த ஞாயிறு வழக்கு தீர்ப்பால் அச்சம்: திருமணத்தில் பாட மறுத்தார் மைத்திரி

 

உயிர்த ஞாயிறு தாக்குதல் வழக்கு தொடர்பான விசாரணைகள் மீண்டும் சூடுபிடித்துள்ள நிலையில், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கவலையில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோருக்கு அண்மையில் மரண தண்டனை விதிக்கப்பட்டதை தொடர்ந்து, மைத்திரி பதற்றத்தில் இருப்பதாக அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகின்றனர்.

இதற்கிடையில், பொலன்னறுவையை சேர்ந்த வர்த்தகர் ஒருவரின் மகனின் திருமண நிகழ்வில் கலந்துகொண்ட மைத்திரி, அங்கு பாடல் பாடுமாறு அனைவரும் கேட்டபோது முதலில் மறுத்துவிட்டார். உயிர்த ஞாயிறு விவகாரம் காரணமாக இயல்பு நிலையில் இல்லை என கூறப்படுகிறது.

இறுதியில் நிர்பந்தத்தின் பேரில் ஒரே ஒரு பாடல் மட்டுமே பாடியதாகவும் தெரியவந்துள்ளது. முன்னர் நஷ்டஈடாக பெருந்தொகை பணத்தை செலுத்திய மைத்திரி, மீண்டும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு சிறை தண்டனை கிடைக்கலாம் என்ற அச்சத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.


Post a Comment