கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மட்டக்களப்பு - கல்லடி சுவாமி விபுலானந்த இசை நடனக் கல்லூரி விடுதி அறையில், முதலாம் ஆண்டு மாணவி ஒருவர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
திருக்கோவில், தம்பிலுவில் பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய கே.யாழினி என்ற நாடகத்துறை மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
