எதிர்ப்பவர்களை அச்சுறுத்த மேலும் இரு மனுக்களா?

 

எதிர்ப்பவர்களை அச்சுறுத்த மேலும் இரு மனுக்களா?

இதுவே தீர்ப்பாக வேண்டும் சொல்லாமல் சொல்லும் ஆளும் தரப்பு

அரசாங்கத்தால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அரசியலமைப்பின் 22 வது திருத்தச் சட்ட மூலத்திற்கு ஆதரவு தெரிவித்து மேலும் இரண்டு இடைக்கால மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

அவற்றுள் ஒரு மனுவை 'நவ சிஹல உருமய' கட்சியின் தலைவர் சரத் மனமேந்திரவும், மற்றைய மனுவை 'ஓய்வூதிய உரிமைகள் பாதுகாப்பு தேசிய அமைப்பின்' பிரதான செயலாளர் கே. சரத் லால் பெரேராவும் தாக்கல் செய்துள்ளனர்.

சம்பந்தப்பட்ட மனுக்களில், 22 ஆவது திருத்தச் சட்ட மூலம் சட்டப்பூர்வமான முறையில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதற்கமைய, குறித்த சட்ட மூலத்தை மக்கள் கருத்துக்கணிப்பு இன்றி பாராளுமன்றத்தில் நிறைவேற்ற முடியும் எனத் தீர்ப்பு வழங்குமாறு மனுதாரர்கள் உச்ச நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Post a Comment