அரசாங்கத்தின் 'பிரஜா சக்தி' தேசிய வறுமை ஒழிப்புத் திட்டத்தின் கீழ் நுவரெலியா மாவட்டத்தில் 997.84 மில்லியன் ரூபாய் செலவில் 786 அபிவிருத்தித் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.
கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் உபாலி பண்ணில தலைமையில் நுவரெலியா மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற முன்னேற்ற ஆய்வுக் கூட்டத்தின் போதே இத்தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதில் 296.19 மில்லியன் ரூபாய் ஒதுக்கீட்டில் 263 வாழ்வாதார அபிவிருத்தி திட்டங்களும், 543.22 மில்லியன் ரூபாய் ஒதுக்கீட்டில் 286 உள்கட்டமைப்பு அபிவிருத்தி திட்டங்களும் உள்ளடங்குகின்றன.
நாட்டின் ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவிலும் குறைந்தபட்சம் ஒரு அபிவிருத்தித் திட்டத்தையாவது நடைமுறைப்படுத்தும் நோக்கில், 2026 வரவு செலவுத் திட்டத்தின் மூலம் 'பிரஜா சக்தி' திட்டத்திற்காக 25 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
பொது நிதி ஒழுக்கத்தைப் பேணி, இத்திட்டங்களின் பலன்கள் மக்களைச் சென்றடைவதை உறுதி செய்யுமாறு அமைச்சர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
.jpg)