இன்றும் பாடசாலைகளுக்கு விடுமுறை

 

நுவரெலியா மாவட்டத்தின் ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட அனைத்து பாடசாலைகளும் இன்று (05) மூடப்பட்டிருக்கும் என மத்திய மாகாண கல்விச் செயலாளர்  தெரிவித்துள்ளார்.

தற்போது நிலவும் மோசமான வானிலை காரணமாக, மத்திய மாகாண கல்வி பணிப்பாளரின் ஆலோசனையின் பேரில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

மோசமான வானிலை காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டிருந்த கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலுள்ள அனைத்து அரசாங்கப் பாடசாலைகளும் இன்று (05) முதல் மீண்டும் வழமையாக திறக்கப்படும் என முதல் அறிவிக்கப்பட்டது. 

Post a Comment