நடிகை த்ரிஷாவின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து விமர்சிப்பதும், அவரது தனிப்பட்ட விடயங்களில் தலையிடுவதும் தவறு என நடிகை சஞ்சனா கல்ராணி தெரிவித்துள்ளார்.
சமீபகாலமாக நடிகை த்ரிஷா குறித்து சமூக வலைத்தளங்களிலும், திரையுலகிலும் பல்வேறு விமர்சனங்களும் சர்ச்சைகளும் எழுந்து வருகின்றன.
இந்நிலையில், த்ரிஷாவை குறிவைத்து விமர்சிப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என சஞ்சனா கல்ராணி கருத்து தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், ஒரு பெண்ணை அவரது தனிப்பட்ட வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு விமர்சிப்பது வருத்தமளிப்பதாகவும், ஒரு நடிகையின் தனிப்பட்ட விடயங்களில் தேவையின்றி தலையிடுவது தவறு எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும், ஒவ்வொருவருக்கும் தங்களுக்கு பிடித்ததை பேசவும், தங்கள் விருப்பப்படி வாழவும் உரிமை இருப்பதாகவும், இதில் நடிகை த்ரிஷாவும் விதிவிலக்கல்ல எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“ஒரு நடிகையாகவும், ஒரு பெண்ணாகவும் அவரை மதியுங்கள். வாய்க்கு வந்ததை பேச வேண்டாம்” என சஞ்சனா கல்ராணி தெரிவித்துள்ளார்.
சஞ்சனா கல்ராணியின் இந்தக் கருத்து தற்போது சமூக வலைத்தளங்களில் கவனம் பெற்றுள்ளது.
