முறையற்ற வெளிநாட்டு கடவுச்சீட்டைப் பெற்றமை தொடர்பாக குடிவரவு குடியகல்வுச் சட்டத்தின் கீழ் குற்றவாளியாகக் காணப்பட்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்த ஷஷி வீரவன்ச, மேன்முறையீட்டு மனு மீதான விசாரணை முடியும் வரை பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு தலைமை மேஜிஸ்திரேட் அஸங்க எஸ். போதரலம முன்னிலையில் இவ்வழமககு விசாரணைக்கு வந்தபோது, அவர் ஏற்கனவே வழங்கப்பட்ட பிணை
நிபந்தனைகளின் அடிப்படையில் விடுவிக்கப்பட்டார்.
2022 ஆம் ஆண்டு குடிவரவு குடியகல்வுச் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டு, இவருக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் ரூ. 100,000 அபராதமும் விதிக்கப்பட்டது.
இந்தத் தண்டனைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டை கொழும்பு மேல் நீதிமன்றம் நிராகரித்திருந்தது.
மேல் நீதிமன்றத் தீர்ப்பிற்கு எதிராக தண்டனை பெற்ற 42 நாட்களுக்குள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யும் சட்டப்பூர்வ உரிமையைப் பயன்படுத்தி, இவர் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
இந்த மேல்முறையீட்டு மனு அடுத்த மாதம் உச்ச நீதிமன்றத்தில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளதால், அதுவரை அவரைப் பிணையில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இவ்வழக்கு மீண்டும் செப்டம்பர் 27 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
