நாட்டில் உரிமம் பெறாமல் இயங்கி வரும் அனைத்து சட்டவிரோத இணையவழி சூதாட்ட வலைத்தளங்களையும் உடனடியாக முடக்குமாறு தொலைபேசி நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு (TRCSL) அனைத்து தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்களுக்கும் இவ்வாறு அறிவுறுத்தியுள்ளது.
இதேவேளை, இணைய வழி சூதாட்டம், தொலைத்தொடர்பு மோசடிகள் மற்றும் அவை சார்ந்த குற்றச் செயல்களுடன் தொடர்புடைய குழுக்கள் பிற நாடுகளில் இருந்து இலங்கைக்கு இடம்பெயர்வதைத் தடுப்பதற்கான விசேட நடவடிக்கைகளும் அரசாங்கத்தினால் ஏற்கனவே எடுக்கப்பட்டுள்ளன.
இத்தகைய நடவடிக்கைகள் பணமோசடி, கடத்தல்கள், மனித கடத்தல் மற்றும் சட்டவிரோத எல்லைதாண்டல் உள்ளிட்ட கடுமையான குற்றங்களுக்கு வழிவகுக்கின்றமையும் கறிப்பிடத்தக்கது.
