இலங்கை சாரதிகளே-இனி தப்பிக்க முடியாது - இதுதான் நிலைமை

 

போதையுடன் வாகனங்களை செலுத்தும் சாரதிகளை கண்டறிய புதிய வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனம் அறிவித்துள்ளது.

இதற்கமைய, போதைக் பொருளைப் பயன்படுத்தி வாகனம் செலுத்தும் முச்சக்கர வண்டிகள், பாடசாலை வாகன உரியாளர்கள் மற்றும் பாரவூர்தி சாரதிகளைச் சோதனையிடும் நடவடிக்கைகள் அனைத்து இடங்;களிலும் எழுமாறாக மேற்கொள்ளப்படவுள்ளதாக தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனம் தெரிவித்துள்ளது.

போதைப்பொருளைப் பயன்படுத்தி பேருந்துகளை இயக்கும் சாரதிகள் மற்றும் நடத்துநர்களைக் கண்டறியும் சோதனைகள் தற்போது 5 மாகாணங்களை உள்ளடக்கிய வகையில் செயற்படுத்தப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.

Post a Comment