சிம்பாப்வே கரிபா ஏரி படகு விபத்து 15 பேர் பலி 27 பேரை காணவில்லை

 

சிம்பாப்வேயின் கரிபா ஏரியில் அதிக பயணிகளை ஏற்றி சென்ற படகு ஒன்று கவிழ்ந்த விபத்தில் 15 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

சிம்பாப்வே மற்றும் ஜாம்பியா இடையே எல்லையாக அமைந்துள்ள கரிபா ஏரி உலகின் மிகப்பெரிய செயற்கை ஏரிகளில் ஒன்றாகும் 1950 களின் இறுதியில் ஜாம்பேசி ஆற்றின் குறுக்கே அணை கட்டப்பட்டதன் மூலம் இந்த ஏரி உருவாக்கப்பட்டது தற்போது 200 கிலோமீற்றருக்கு மேல் நீளமும் 40 கிலோமீற்றர் வரை அகலமும் கொண்டதாக காணப்படுகிறது

இந்த ஏரியில் சிம்பாப்வே மற்றும் ஜாம்பியா ஆகிய இரு நாடுகளும் பங்கு கொண்டுள்ளன இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லை ஏரியின் மைய பகுதி வழியாக செல்கிறது

நேற்று நடைபெற்ற இந்த விபத்தில் 15 பேர் உயிரிழந்ததுடன் 27 பேர் வரை காணாமல் போயுள்ளனர் என பேரிடர் மேலாண்மை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் விபத்துக்குள்ளான படகில் இருந்து 77 பேர் உயிருடன் மீட்கப்பட்டு அருகில் உள்ள தீவுக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்

அதிகாரப்பூர்வ பயணச்சீட்டு பதிவின்படி படகில் 114 பயணிகளும் 5 ஊழியர்களும் இருந்தனர் என சிவில் பாதுகாப்பு பிரிவு குறிப்பிட்டுள்ளது ஆனால் சீட்டு தேவையில்லாத சிறு குழந்தைகள் எத்தனை பேர் இருந்தனர் என்பது குறித்த தகவல் இல்லை எனவும் அவர்கள் கணக்கில் எடுக்கப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளது குறித்த படகின் கொள்ளளவு 90 பேர் என கூறப்படுகிறது

இந்த விபத்து தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் முட்சா முரோம்பெட்ஸி வெளியிட்ட காணொளியில் படகு புறப்படும் போது கரையில் இருந்த மக்கள் வழியனுப்புவதும் ஏரியின் அலைகள் குறித்து சிலர் அச்சம் தெரிவிப்பதும் பதிவாகியுள்ளது கிராம மக்கள் கரிபா நகருக்கு செல்ல இந்த படகு சேவையை பயன்படுத்தி வருகின்றனர்

விபத்து நடந்த இடத்தில் மீட்பு பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாக சிம்பாப்வே பொலிஸ் தெரிவித்துள்ளது



Post a Comment