யாழில் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் வெறியாட்டம்

 

வடமராட்சி நெல்லியடி பகுதியில் ஓய்வு பெற்ற அரச அதிகாரி ஒருவரின் வீட்டிற்குள் புகுந்து தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் ஒருவர் தாக்குதல் நடத்தியுள்ளார்.

இந்த சம்பவம் நேற்று நள்ளிரவு பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனிப்பட்ட பிரச்சினைகள் காரணமாக குறித்த நபர் மது போதையில் நள்ளிரவு 12.55 அளவில் வீட்டிற்குள் புகுந்து தாக்குதல் நடத்தியுள்ளார்.

இந்த நிலையில் 119 என்ற அவசர இலக்கத்திற்கு அழைப்பினை ஏற்படுத்தியதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு பொலிஸார் விரைந்துள்ளனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய தேசிய மக்கள் சக்தியின்; வடமராட்சி தெற்கு மேற்கு  பிரதேச சபை உறுப்பினர் கணேசரூபன் மற்றும் அவரது குழுவினரை  பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட குறித்த நபர் மற்றும் குழுவினர் இன்று காலையில் பிணையில் செல்ல பொலிஸாரால் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


அரசியல் அழுத்தம் காரணமாகவே இவர் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


சந்தேக நபரை நாளைய தினம் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Post a Comment