நாட்டின் சில பகுதிகளில் நிலவும் அதிக வெப்பநிலை மற்றும் சில பகுதிகளில் பெய்யும் பலத்த மழை காரணமாக சிறுவர்களிடையே 2 வகையில் நோய்கள் பரவும் அபாயம் உள்ளதாக சிறுவர் நல வைத்திய நிபுணர் டாக்டர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.
1. அதிக வெப்பத்தால் ஏற்படும் பாதிப்புகள்
தற்போதைய வெப்பமான வானிலையால் சிறுவர்கள், பெரியவர்கள், கர்ப்பிணி தாய்மார்கள் என அனைவருக்கும் நீர்ச்சத்து இழப்பு ஏற்படும் வாய்ப்பு உள்ளது.
ஒரு சாதாரண முதியவர் நாளொன்றுக்கு குறைந்தது 3 லீட்டர் நீர் குடிக்க வேண்டும்
சிறுவர்களுக்கு அவர்களின் உடல் எடைக்கு ஏற்ப நீர் வழங்க வேண்டும்
நீண்ட காலமாக நீர் குடிக்காமல் இருப்பது சிறுநீரக கோளாறுகளை ஏற்படுத்தும்
நீர் குடிக்காமல் வெளியில் வேலை செய்வது, சுற்றுலா செல்வது போன்றவற்றால் வெப்ப அதிர்சி, மயக்கம், வலிப்பு ஏற்பட்டு மரணம் கூட நேரலாம்
எனவே வீட்டை விட்டு வெளியே செல்லும் போது நீர் போத்தல் எடுத்து செல்லுமாறு வைத்தியர் அறிவுறுத்தியுள்ளார்.
2. மழையால் ஏற்படும் பாதிப்புகள்
இந்த காலகட்டத்தில் வயிற்றுப்போக்கு பரவும் வாய்ப்பு அதிகம். அதனால் சிறுவர்களுக்கு சுத்தமான குடிநீர் மற்றும் சுத்தமான உணவுகளை மட்டும் கொடுக்குமாறு கேட்டுக்கொண்டார்.
செயற்கை பானங்கள் மற்றும் நொறுக்குதீனிகளை தவிர்த்து, எலுமிச்சை, தோடம்பழம், இளநீர், கஞ்சி, சூப் போன்ற இயற்கை திரவ உணவுகளை கொடுக்குமாறும் அறிவுறுத்தினார்.
மேலும் சிறுவர்களை கைபேசியில் நேரத்தை கழிக்க விடாமல் உடற்பயிற்சி மற்றும் விளையாட்டு நடவடிக்கைகளில் ஈடுபடுத்துமாறும் டாக்டர் தீபால் பெரேரா பெற்றோரிடம் கேட்டுக்கொண்டார்.
