மட்டக்களப்பில் 2 பிள்ளைகளின் தாயார் உயிரிழப்பு

மட்டக்களப்பு கிரான்குளத்தைச் சேர்ந்த 41 வயதுடைய இரு பிள்ளைகளின் தாயார் ஒருவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி 11.08.2026 அன்று உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த பெண் கடந்த மாதம் ஒரு விபத்தில் சிக்கி காயமடைந்து சிகிச்சை பெற்று வீடு திரும்பியிருந்தார். இந்த நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன் திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டதை அடுத்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.

காத்தான்குடி பிரதேச செயலகத்தின் விவசாய பிரிவில் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமையாற்றி வந்த இவர், தனது கடமையை சிறப்பாக ஆற்றியதுடன் சக உத்தியோகத்தர்களுடனும் புரிந்துணர்வுடன் செயற்பட்டு வந்துள்ளார்.

இவரது திடீர் இழப்பு குடும்பத்தினர் மற்றும் சக உத்தியோகத்தர்கள் மத்தியில் ஆழ்ந்த அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.

Post a Comment