ஆடையின்றி நின்றாயா?" - ஆபாச துறைக்குள் நுழைந்தது குறித்து மனம் திறந்த சன்னி லியோன்

ஆபாச படங்கள் மூலம் பிரபலமாகி, பின்னர் பாலிவுட்டில் நடிகையாக மாறிய *சன்னி லியோன்* தனது கடந்த காலம் குறித்தும், அது பெற்றோருக்கு ஏற்படுத்திய வலி குறித்தும் மனம் திறந்துள்ளார்.

*பணத்தேவைக்காக எடுத்த முடிவு*  

சமீபத்திய பேட்டி ஒன்றில் சன்னி லியோன் பேசுகையில், தான் பணத்தேவைக்காகவே ஆபாச துறையில் நுழைந்ததாக கூறியுள்ளார். 

*தாயின் கண்ணீர்*  

தான் `Penthouse Pet of the Year` விருது பெற்று *1 லட்சம் டொலர்* பரிசுத் தொகை பெற்ற விஷயத்தை பெற்றோரிடம் கூறி அமைதிப்படுத்த முயன்றதாக தெரிவித்தார். 

ஆனால் அதைக்கேட்ட அவரது தாய், *"நீ ஆடையின்றி நின்றாயா?"* என்று கேட்டு கண்ணீர்விட்டு அழுதார் என சன்னி நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

*தந்தையின் வார்தைகள்*  

மேலும் தனது சகோதரனின் பெயரையே மேடை பெயராக பயன்படுத்தியதற்கு தாய் எதிர்பு தெரிவித்ததாகவும், இந்த முடிவை கேட்ட தந்தை மிகுந்த வேதனையடைந்ததாகவும் கூறினார்.

எனினும் தந்தை அவரிடம், *"ஒரு பெற்றோராக இதை நான் ஏற்றுக்கொள்ள முடியாது. ஆனால் நீ இந்த வழியை தேர்ந்தெடுத்துவிட்டதால், இதில் உறுதியாக நின்று வெற்றி பெற்று காட்டு"* என கூறியதாக சன்னி பகிர்ந்துள்ளார்.

*தற்போதைய வாழ்கை*  

ஆபாச துறையிலிருந்து வெளியேறி இந்தியாவில் குடியேறிய சன்னி லியோன், தற்போது திருமணமாகி *4 குழந்தைகளை* பெற்றும், தத்தெடுத்தும் வளர்த்து வருகிறார். பாலிவுட் மற்றும் விளம்பரங்களில் பிசியாக நடித்து வருகிறார்.

அவரது இந்த வெளிப்படையான பேச்சு சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது ஒரு மனிதரின் வாழ்கை பயணத்தையும், பெற்றோரின் உணர்வுகளையும் பிரதிபலிக்கும் பதிவாக பார்க்கப்படுகிறது.

Post a Comment