தாம்பத்ய வாழ்வு என்பது பசி, தூக்கம், ஓய்வு போல உடலோடும் உள்ளத்தோடும் தொடர்புடைய முக்கியமான ஒன்று. இதில் ஏற்படும் குறைபாடு கணவன்-மனைவி உறவில் மட்டுமல்ல, மன மற்றும் உடல் ஆரோக்கியத்திலும் பாதிப்பை ஏற்படுத்தும்.
ஆண்களுக்கு ஏற்படும் *விறைப்புத்தன்மை குறைபாடு* நரம்பு, ஹார்மோன், உடல்நலன் மற்றும் உளவியல் காரணங்களால் வரலாம். இதற்கு சித்த வைத்தியத்தில் உரிய உணவு மற்றும் மூலிகை மருந்துகள் மூலம் தீர்வு காணலாம் என வைத்தியர்கள் கூறுகின்றனர்.
*1. சித்த மூலிகைகள்*
நரம்புகளுக்கு வலு தந்து தாம்பத்ய திருப்தியை தரும் மூலிகைகள்:
*நெருஞ்சில், அமுக்கராக் கிழங்கு, தண்ணீர் விட்டான் கிழங்கு, பால் மிதப்பன் கிழங்கு, வாலுழுவை, பூமிசர்க்கரைக் கிழங்கு, நிலப்பனைக் கிழங்கு, மதனகாமப் பூ, குங்குமப் பூ, பூனைக்காலி விதை, சாலாமிசிரி, சாரப்பருப்பு*
*2. சித்த செய் மருந்துகள்*
வைத்தியரின் ஆலோசனையுடன் எடுக்க வேண்டியவை:
- *அமுக்கரா சூரணம்* - 1 கிராம்
- *பூரண சந்திரோதயம்* - 100 மிகி
- *நாகப் பற்பம்* - 100 மிகி
- *முத்து பற்பம்* - 100 மிகி
இவற்றை பால் அல்லது தேனில் கலந்து நாளொன்றுக்கு 3 வேளை சாப்பிடலாம்.
- *சாலாமிசிரி லேகியம்* - 1 கிராம் வீதம் நாளொன்றுக்கு 2 வேளை
*3. உணவு முறை*
தாதுக்களை பலப்படுத்தும் மற்றும் விறைப்புத்தன்மையை மேம்படுத்தும் உணவுகள்:
*மாப்பிள்ளை சம்பா, கறுப்புக் கவுனி அரிசி, உளுந்து, வெந்தயம், பாதாம், முந்திரி, பேரிச்சம், மாதுளை, வாழை, வேர்கடலை, முட்டை, நாட்டுக்கோழி, கடல் உணவுகள், கேரட், பீட்ரூட், அறுகீரை, பசலைக்கீரை, கருப்பட்டி*
வைட்டமின் *B3, B9, C, D, E* மற்றும் தாதுக்களான *மக்னீசியம், துத்தநாகம், கால்சியம், பாஸ்பரஸ்* குறைபாடு இருந்தாலும் இப்பிரச்சனை வரலாம். எனவே சத்துள்ள உணவுகளை சேர்துக்கொள்ள வேண்டும்.
*4. உடற்பயிற்சி*
- *சைக்கிளிங்*: இடுப்பு மற்றும் ஆசன பகுதி தசைகளுக்கு இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும்.
- *ஹெகல் பயிற்சி*: இடுப்பில் கை வைத்து உட்கார்ந்து எழுதல், கால்களை வயிறு வரை மடக்குதல், படுத்தபடி கால்களை மேலே தூக்குதல் போன்றவற்றை தினமும் 10 முறை செய்வதால் இடுப்பு தசைகள் உறுதியாகும் மற்றும் புரோஸ்டேட் ஆரோக்கியம் மேம்படும்.
*5. உளவியல் ஆரோக்கியம்*
மனதில் உள்ள தாழ்வு மனப்பான்மை நீங்க தம்பதியர் மனம் விட்டு பேச வேண்டும். மன அழுத்தம் குறைய இறை பிரார்தனை, தியானம் உதவும்.
*முக்கிய குறிப்பு*: மேலே குறிப்பிடப்பட்டுள்ள சித்த மருந்துகளை தகுதிவாய்ந்த சித்த வைத்தியரின் ஆலோசனையின்றி பயன்படுத்த வேண்டாம். உடல்நிலைக்கு ஏற்ப மருந்தின் அளவு மாறுபடும்.
