மலையக மக்களுக்கு சற்று முன் வெளியான அபாய எச்சரிக்கை அறிவிப்பு

நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு அபாய எச்சரிக்கை அறிவிப்புகளை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் புதுப்பித்துள்ளது.

கண்டி மாவட்டத்தின் பஸ்பாகே கோரளை பிரதேச செயலகப் பிரிவிற்கு இரண்டார் கட்ட எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதாவது குறித்த பகுதி மக்களை அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நுவரெலியா மாவட்டத்தின் தலவாக்கலை, கொத்மலை மேற்கு, அம்பகமுவ, நுவரெலியா, நோர்வுட் மற்றும் கொத்மலை கிழக்கு ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகள்.

கேகாலை மாவட்டத்தின் தெஹியோவிட்ட, புலத்கொ{ஹபிட்டிய, யட்டியாந்தோட்டை, தெரணியகல மற்றும் அரநாயக ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் இரண்டாம் கட்ட எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கண்டி மாவட்டம்: தொலுவ, பன்வில, மெததும்பர, உடபலாத, கங்க இஹள கோரளை, உடுதும்பர மற்றும் தெல்தோட்டை ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும், இரத்தினபுரி மாவட்டத்தின் இரத்தினபுரி, ஓபநாயக்க மற்றும் இம்புல்பே ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு முதலாம் கட்ட எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Post a Comment