யாழ்பாணம் சுன்னாகம் பகுதியில் தாயாருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தின் பின்னர் 24 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சம்பவம் நேற்று 06.08.2025 இடம்பெற்றுள்ளது.
தாயின் அடையாள அட்டையை பயன்படுத்தி சிம் அட்டை வாங்கி தருமாறு இளைஞர் கோரியதை அடுத்து இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
அதனை தொடர்ந்து இளைஞர் தனக்குத்தானே தீ வைத்துக்கொண்டு அருகிலுள்ள வயலில் உள்ள கிணற்றில் பாய்ந்துள்ளார்.
சடலம் மீட்கப்பட்டு உடற்கூற்று பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
