பௌத்த அறநெறி மாணவர்களுக்கு அரை நிர்வாண பரிசு
அனுராதபுர மாவட்டத்தில் நடைபெற்ற தேசிய தின தஹம் பாடசாலைப் போட்டிகளில் வெற்றியீட்டிய வயது குறைந்த மாணவர்களுக்கு, அரைநிர்வாணப் பெண் நடனக் கலைஞரின் உருவம் பொறிக்கப்பட்ட நினைவுப்பரிசு வழங்கப்பட்டமை தொடர்பில் பெற்றோர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை (02) அனுராதபுர மத்திய மகா வித்யாலயத்தில் நடைபெற்ற இந்த விருது வழங்கும் விழாவில், வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க மற்றும் புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார விவகார பிரதி அமைச்சர் கமகே திஸாநாயக்க ஆகியோர் பிரதம விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வில் அனுராதபுர மாவட்டத்திலுள்ள தஹம் பாடசாலை மாணவர்கள் கலந்துகொண்டதுடன், அங்கு சான்றிதழ்களும் பரிசுகளும் வழங்கி வைக்கப்பட்டன.
இருப்பினும், இசைக்கருவியை மீட்டும் பெண்ணின் உருவம் பொறிக்கப்பட்ட இந்த நினைவுப்பரிசு, நாடகம் மற்றும் இசைப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டதாகவும், அது அந்தப் பாடப் பிரிவுக்குப் பொருத்தமானது எனவும் அனுராதபுர மாவட்ட தலைமைச் செயலாளர் வணக்கத்திற்குரிய குசலதம்ம தேரர் தெரிவித்துள்ளார்.
மேலும், பெற்றோர் இதன் யாதார்த்தத்தைப் புரிந்துகொண்டிருக்க வேண்டும் என்றும் தேரர் சுட்டிக்காட்டியுள்ளார்.
