யாழில் நாதஸ்வர வித்துவான் தவறான முடிவு

நேற்றையதினம் 03-08-2026 யாழ்ப்பாணம் கோண்டாவில் காளி கோவிலடி பகுதியை சேர்ந்த கோவிந்தராசா ஜனுசன் (வயது 32) என்னும் நாதஸ்வர வித்துவான் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில், சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் , கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

அண்மையில் தவில் வித்துவான் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்த நிலையில், மீண்டும் நாதஸ்வர வித்துவானின் உயிரிழப்பு யாழில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

Post a Comment