Posts

படிப்பைப் பாதியில் கைவிடும் 80% மாணவர்கள் போதைக்கு அடிமை

பல்கலைக்கழக மாணவர்களிடையே போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்து வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

"நாடே ஒன்றுபடுவோம்" தேசிய திட்டத்தின் ஊடக சந்திப்பில் உரையாற்றிய பேராசிரியர் அமில இசுரு இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

பல்கலைக்கழகப் படிப்பைப் பாதியில் கைவிடும் ஆண் மாணவர்களில் 70% முதல் 80% வரையானோர் ஏதேனும் ஒரு போதைப்பொருளுக்கு அடிமையாகியிருப்பதாக அவர் தெரிவித்தார்.

பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் நடத்தப்பட்ட ஆய்வுகள், இளைஞர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் கடத்தல்காரர்கள் தீவிரமாக செயல்பட்டு வருவதைக் காட்டுகின்றன.

போதைப்பொருளை நிறுத்தும் போது ஏற்படும்  அறிகுறிகளை  கட்டுப்படுத்தவே பலர் தொடர்ச்சியாக அதனைப் பயன்படுத்துவதாகவும் அவர் விளக்கமளித்தார்.

எனவே, போதைப்பொருள் கடத்தல்காரர்களின் இந்த முயற்சியைத் தடுக்கவும், மாணவர்களைப் பாதுகாக்கவும் உடனடியாக வலுவான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Post a Comment