களுவாஞ்சிக்குடியில் கோர விபத்து! சிறுவன் பலி – 4 பேர் படுகாயம்

மட்டக்களப்பு – களுவாஞ்சிக்குடி பிரதான வீதியில் இடம்பெற்ற கோர மோட்டார் சைக்கிள் விபத்தில் 17 வயது சிறுவன் உயிரிழந்துள்ளதுடன், மேலும் நான்கு பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இந்த விபத்து நேற்று (22.08.2026) இரவு சுமார் 9.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கோட்டை கல்லாறை பகுதியைச் சேர்ந்த ஜெகநாதன் கிஷோர் என்ற 17 வயது சிறுவனே விபத்தில் உயிரிழந்துள்ளார்.

வீதியை கடப்பதற்காக மூன்று சிறுவர்கள் வீதியோரத்தில் நின்றுகொண்டிருந்தபோது, வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் வேகக்கட்டுப்பாட்டை இழந்து அவர்கள் மீது மோதியதாக தெரிவிக்கப்படுகிறது.

விபத்தில் மோட்டார் சைக்கிளை செலுத்திய சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

மேலும், மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் மற்றும் வீதியோரத்தில் நின்ற மூன்று சிறுவர்கள் என நான்கு பேர் படுகாயமடைந்த நிலையில் களுவாஞ்சிக்குடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Post a Comment