நண்பர்களுடன் குளிக்கச் சென்ற 22 வயது இளைஞருக்கு நேர்ந்த சோகம்!


எஹலியகொடை பகுதியில் உள்ள கல்பொத்தஹேன குளத்தில் நீராடிக் கொண்டிருந்த நபர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் மீகஹவத்த பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்த நபர் மேலும் நான்கு நண்பர்களுடன் குளத்தில் நீராடிக் கொண்டிருந்த போதே இந்த விபத்து நேர்ந்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் எஹலியகொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment