தம்பலகாமம் ஜெயப்புற பகுதியில் கோர விபத்து – 23 வயது இளைஞன் உயிரிழப்பு

 திருகோணமலையிலிருந்து சீமெந்து ஏற்றிக்கொண்டு கொழும்பு நோக்கி பயணித்த லொறியும், தம்பலகாமம் பகுதியில் இருந்து மோட்டார் சைக்கிளில் திருகோணமலை நோக்கி பயணித்த இளைஞரும் நேருக்கு நேர் மோதியதில் கோர விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்து தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஜெயப்புற பகுதியில் இன்று (29 ) மாலை 7 30  மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் தம்பலகாமம் பட்டிமேடு பகுதியைச் சேர்ந்த பிரணவன், 23 வயதுடைய திருமணமாகாத இளைஞர் என தெரிவிக்கப்படுகிறது.

சடலம் தற்போது கந்தளாய் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை தம்பலகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment