21 முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களிடமிருந்து 17 இலட்சத்து 93 ஆயிரத்து 480 ரூபாய் வாடகைத் தொகை இதுவரை வசூலிக்கப்படவில்லை என தெரியவந்துள்ளது.
குறித்த நிலுவை வாடகைத் தொகைகள் 2015 முதல் 2020 வரையிலான காலப்பகுதிக்குரியவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, 2009 முதல் 2016 வரையான காலப்பகுதியில் ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவு அதிகாரிகளுக்கு வழங்கப்பட்ட கொழும்பு 05 பகுதியில் உள்ள 8 வீடுகளுக்கான வாடகையையும் வசூலிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை எனவும் தணிக்கை அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும், 2012 முதல் 2024 வரையான காலப்பகுதியில் 22 வீடுகளிலிருந்து வசூலிக்கப்பட வேண்டிய நிலுவை வாடகைத் தொகை 1,73,190 ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், ஸ்ரீ ஜயவர்தனபுர பகுதியில் உள்ள 15 வீடுகளுக்கு 2012 முதல் 2016 வரையான காலப்பகுதியில் செலுத்தப்பட வேண்டிய வாடகைத் தொகை 84 இலட்சத்து 49 ஆயிரத்து 265 ரூபாய் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பொது நிர்வாகம் தொடர்பான 2025ஆம் ஆண்டுக்கான வருடாந்திர செயல்திறன் அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள தணிக்கை அறிக்கையிலேயே இந்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
