சுமார் 1 பில்லியன் அமெரிக்க டொலர் பணத்தை சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு அனுப்பியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நான்கு தனியார் வங்கி அதிகாரிகளும் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த வழக்கு தொடர்பான விசாரணை இன்று நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், சந்தேகநபர்களை செப்டம்பர் 3ஆம் திகதி வரை மேலும் விளக்கமறியலில் வைக்க கொழும்பு பிரதான நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
சந்தேகநபர்கள் சார்பில் முன்வைக்கப்பட்ட சட்டத்தரணிகளின் வாதங்களை பரிசீலித்த நீதிமன்றம், அவர்களுக்கு பிணை வழங்குவதற்கான கோரிக்கையையும் நிராகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
