சட்டவிரோதமாக 1 பில்லியன் டொலர் கடத்தல் நான்கு தனியார் வங்கி முகாமையாளர்கள் கைது

 

சுமார் 1 பில்லியன் அமெரிக்க டொலரை சட்டவிரோதமாக வெளிநாட்டிற்கு கடத்திய விவகாரம் தொடர்பில் நான்கு பிரபல தனியார் வங்கிகளின் முகாமையாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் நிதி குற்ற விசாரணை பிரிவினரால் இந்த கைது மேற்கொள்ளப்பட்டது. குறித்த நான்கு பேரும் அவர்கள் பணிபுரியும் வங்கிகளுக்குள்ளேயே வைத்து கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையில் இப்படியான வங்கி முகாமையாளர்கள் கைது செய்யப்பட்டது இதுவே முதல் முறை என பொலிஸார் கூறியுள்ளனர்.

இந்த மோசடியை ஒருங்கிணைத்த முக்கிய நபர் குறித்த அதிகாரிகளுக்கு வாரந்தோறும் பணம் வழங்கியுள்ளார் என விசாரணையில் தெரியவந்துள்ளது. அதன்படி ஒருவருக்கு வாரத்திற்கு 30,000 ரூபா, 50,000 ரூபா மற்றும் 1 இலட்சம் ரூபா வரை வழங்கப்பட்டுள்ளது.

கைதான நான்கு முகாமையாளர்களில் ஒருவருக்கு ஒரு தடவையில் சுமார் 10 இலட்சம் ரூபாய் வரை கொடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் நிதி குற்ற விசாரணை பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment