Posts

அக்டோபர் 01 முதல் புதிய VAT இன்வாய்ஸ் கட்டாயம் உள்நாட்டு இறைவரி அறிவிப்பு

 

திருத்தப்பட்ட மதிப்புக்கூட்டு வரி VAT இன்வாய்ஸ் படிவம் எதிர்வரும் அக்டோபர் முதலாம் திகதி முதல் கட்டாயமாக நடைமுறைக்கு வரும் என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த புதிய படிவத்தை ஜூலை முதலாம் திகதி முதல் அமல்படுத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் வணிகர்களும் வரி செலுத்துவோரும் தங்கள் முறைமைகளை தயார்படுத்திக்கொள்ள கூடுதல் நேரம் வழங்கும் நோக்கில் அக்டோபருக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

வரி வசூலை ஒழுங்குபடுத்துவதற்கும் வரி முறைமையில் வெளிப்படைத்தன்மையை அதிகரிப்பதற்கும் கடந்த மார்ச் 27 ஆம் திகதி இந்த புதிய இன்வாய்ஸ் வடிவம் அறிவிக்கப்பட்டது.

எனினும் நிறுவனங்களில் உள்ள மென்பொருள் மற்றும் கணக்கியல் முறைமைகளை மாற்ற வேண்டும் என வர்த்தகர்கள் கோரிக்கை விடுத்தனர். அதனை கருத்தில் கொண்டே கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

எனவே அக்டோபர் 01 முதல் நிர்ணயிக்கப்பட்ட விவரங்களின்படி தங்கள் பில்லிங் மற்றும் கணக்கியல் முறைமைகளை தயார்படுத்திக்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட வர்த்தகர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

போலி VAT இன்வாய்ஸ் பயன்பாட்டை தடுப்பது, பரிவர்த்தனைகளை சரியான நேரத்தில் கண்காணிப்பது மற்றும் வரி வருவாய் இழப்பை குறைப்பது ஆகியவை இதன் முக்கிய நோக்கங்கள் என திணைக்களம் மேலும் கூறியுள்ளது.




Post a Comment