Posts

இலங்கையின் புதிய VAT சட்டத்தால் வரப்போகும் மாற்றம்!


இலங்கையில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த 2026 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க பெறுமதி சேர்க்கப்பட்ட வரி (திருத்தப்பட்ட) சட்டம், சபாநாயகரால் ஜூன் 30 அன்று உத்தியோகபூர்வமாக சான்றளிக்கப்பட்டு, ஜூலை 3 அன்று வர்த்தமானியில் (Gazette) வெளியிடப்பட்டுள்ளது.

இந்த புதிய சட்டத்தின் மூலம், இலங்கையர்களுக்கு டிஜிட்டல் சேவைகளை வழங்கும் சர்வதேச நிறுவனங்களுக்கு முக்கிய நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

ஆரம்பத்தில் வருடாந்த VAT பதிவு வரம்பை 36 மில்லியன் ரூபாயாக குறைக்க முன்மொழியப்பட்டிருந்தாலும், புதிய சட்டத்தின்படி அது மாற்றமின்றி 60 மில்லியன் ரூபாயாகவே தக்கவைக்கப்பட்டுள்ளது.

அத்துடன்  Netflix போன்ற ஸ்ட்ரீமிங் தளங்கள், கிளவுட் கம்ப்யூட்டிங் சேவைகள், ஒ ன்லைன் விளம்பர நிறுவனங்கள், App ஸ்டோர்கள் மற்றும் மென்பொருள் வழங்குநர்கள் போன்ற வெளிநாட்டு டிஜிட்டல் வணிகங்கள், இலங்கையில் 12 மாதங்களில் 60 மில்லியன் ரூபாயையோ அல்லது ஒரு காலாண்டில் 15 மில்லியன் ரூபாயையோ தாண்டினால் கட்டாயம் VAT பதிவு செய்ய வேண்டும்.

எனினும், இலங்கையிலுள்ள ஏனைய VAT பதிவுசெய்யப்பட்ட வணிகங்களுக்கு வழங்கப்படும் சேவைகளுக்கு (B2B) இந்த வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

பிரபல நிதி ஆலோசனை நிறுவனமான KPMG இன் வரி ஆலோசகர்களின் பகுப்பாய்வில் இந்த முக்கிய விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

Post a Comment