இன்று சனிக்கிழமையன்று தாய்வானின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளிலும், ஜப்பானின் கடலோரப் பகுதிகளிலும் பலத்த மழையைக் கொட்டவிருக்கும் இப்புயல், அதன்பின் சீனாவில் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் தாய்வானில் முன்னெச்சரிக்கையாகப் பாடசாலைகள், அலுவலகங்கள் மூடப்பட்டு நூற்றுக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.
ஏற்கனவே கடந்த வாரம் 'மேசாக்' புயல் ஏற்படுத்திய வெள்ளப் பெருக்கால் சீனாவில் 39 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இந்த புதிய புயல் ஆசியப் பிராந்தியத்திற்கு மேலும் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது.
