எப்பாவல மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல பிரதேசங்களில் நீண்ட காலமாக சட்டவிரோத மதுபானம் மற்றும் போதைப்பொருள் விநியோக கடத்தலில் ஈடுபட்டு வந்த, "தோணி" என்ற புனைப்பெயரால் அழைக்கப்படும் பெண் ஒருவர் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் எப்பாவல, பத்கொலவெட்டிய பகுதியைச் சேர்ந்த சுரேகா தீபானி என்ற இரண்டு பிள்ளைகளின் தாயாராவார்.
எப்பாவல பொலிஸார் அந்தப் பெண்ணின் வீட்டை திடீர் சோதனையிட்டபோது, அவரிடம் இருந்து 2.450 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இப் பெண்ணுக்கு எதிராக இதற்கு முன்னரும் சட்டவிரோத மதுபானக் கடத்தல் தொடர்பாக 10-க்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுகள் உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நேற்று (04) தம்புத்தேகம நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, எதிர்வரும் ஜூலை 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
